Mantras

மஹாலக்ஷ்மி அஷ்டகம்

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜித
ஷங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமஸ்துதே

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

ஸர்வக்நே சர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வதுக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்நே யோக ஸ்ம்பூ தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்பிரஹ்ம ஸ்வரூபினி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமஸ்துதே

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத்ஸ்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமஸ்துதே

மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய : படேத் பக்திமான் நர :
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

ஏக காலம் படேந் நித்யம் மஹா பாப விநாஷணம்
த்விகாலம் ய : படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:

த்ரிகாலம் ய படேந்நித்யம் மஹா ஷத்ரு விநாஷனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்ன வரதா ஸூபா

மஹாலக்ஷ்மி அஷ்டகத்தின் தமிழ் விளக்கம்

சிருஷ்டியின் மூலமாக விளங்குபவளும், ஸ்ரீபீடத்தில் வைத்து தேவர்களால் வணங்கப்படுபவளும், அழகிய திருக்கரத்தில் சங்கு, சக்கரம், கதை வைத்திருப்பவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.

கருட வாகனத்தில் அமர்ந்தவளும், கோலாஸூரர்களுக்கு அச்சம் தந்தவளும், சகல பாவங்களையும் நீக்குபவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன். அனைத்தும் அறிந்தவளும், அனைத்து வரங்களைத் தருபவளும், துஷ்ட குணங்களை அழிப்பவளும், துக்கங்களை மாற்றுபவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.

சாதனைகள் புரிய புத்தியை அளிப்பவளும், செழிப்புடன் வாழ தனது பாத கமலங்களை அருள்பவளும், மந்திர சூட்சும ஸ்வரூபமாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன். ஆதி அந்தம் இல்லாதவளும், சகல விஷயங்களுக்கும் காரணமாக இருப்பவளும், அதிர்ஷ்ட யோகமாகப் பிறந்தவளும், வெற்றியுடன் இணைந்தவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.

சூட்சும வடிவில் ஆதார சக்தியாக விளங்குபவளும், தீமைக்கு எதிராக அச்சமூட்டும் ருத்ரணியாக விளங்குபவளும், முப்பெரும் சக்தியின் பிறப்பிடமாக விளங்குபவளும், பாபங்களை அழிப்பவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.

தாமரை ஆசனத்தில் அழகுடன் அமர்ந்திருப்பவளும், ஞான தபஸ்வினியாக விளங்குபவளும், கலியுகத்தின் அன்னையாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன். தூய வெண்மை உடையை அணிந்திருப்பவளும், சர்வாலங்கார ஆபரணங்கள் அணிந்திருப்பவளும், தாய்க்கு தாயாகக் காப்பவளுமான மஹாலக்ஷ்மியை துதிக்கிறேன்.

Sri Ganapathi Gayatri Mantra

Ganapathi

Sri Dhakshinamoorthy Gayatri Mantra

Dhakshinamoorthy

Sri Durga Gayatri Mantra

Sri Durga Gayatri Mantra

Sri Saraswati Gayatri Mantra

Sri Saraswati Gayatri Mantra

Sri Dhanvanthari Gayatri Mantra

Sri Durga Gayatri Mantra

Sri Sudarshana Gayatri Mantra

Sri Sudarshana Gayatri Mantra

Sri Krishna Gayatri Mantra

Sri Krishna Gayatri Mantra

Mrityunjaya Gayatri Mantra

Mrityunjaya Gayatri Mantra

Sri Rudra Gayatri Mantra

Sri Rudra Gayatri Mantra

Sri Sarpa Gayatri Mantra

Sri Sarpa Gayatri Mantra

Sri Kubera Gayatri Mantra

Sri Mahalakshmi Gayatri Mantra

Sri Mahalakshmi Gayatri Mantra

Sri Rahu Gayatri Mantra

Sri Rahu Gayatri Mantra

Sri Ketu Gayatri Mantra

Sri Ketu Gayatri Mantra

Sri Angaraka Gayatri Mantra

Sri Angaraka Gayatri Mantra

Sri Saneeswara Gayatri Mantra

Sri Saneeswara Gayatri Mantra